தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ராணி ( 60) நேற்று ஜூன் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.கடந்த 1989 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த இவர் 33 ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் பணி ஓய்வு பெற்றதை அடுத்து இன்று காலை பெண்ணாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கீதா தலைமையில்
தூய்மை பணியாளர் ராணிக்கு மாலை அணிவிக்கப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முதல் வட்டாட்சியர் அலுவலகம்,கடைவீதி,பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு வழியாக அவரது வீடு வரை பட்டாசுகள் வெடித்தும்,மேள தாளங்களுடன் நடனமாடி ஊர்வலமாக அழைத்து பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இதில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் ,பேரூராட்சி அலுவலக பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,தள்ளுவண்டி தூய்மை பணியாளர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த விழாவில் கலந்து கொண்டனர்.தூய்மைப்பணியாளர் ஒருவர் பணி ஓய்வுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வோடு வழியனுப்பி வைத்த நிகழ்வு கவனம் பெற்றது.