- மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றத்ற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறி, பா.ம.க. வழக்கறிஞர் பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில், முறையீட்டை முன் வைத்த வழக்கறிஞர் பாலு, கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை பாதுகாப்பை விலக்கி கொண்டு விட்டு, பிறகு பாதுகாப்பு வழங்கியதாகவும்; கேரள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியான நீதிபதி மணிக்குமாரின் இல்லத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் விலக்கப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/damage-to-agricultural-lands-a-case-seeking-an-order-to-take-appropriate-action-against-the-operators-of-the-quarry/
முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் மனு அளிக்க வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.