வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும்‌ சேலத்தை சேர்ந்த ஏஜெண்ட் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடத்தல்‌‌.!

1 Min Read
  • வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும்‌ சேலத்தை சேர்ந்த ஏஜெண்ட் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடத்தல்‌‌. கடத்தல் குறித்து காவல்துறையினர் விசாரணை.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரகுமான். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக உள்ளார். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த அரசு மற்றும் மாதவன் என்பவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்காக ரகுமானிடம் 20 லட்சம் கொடுத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

ஆனால் பணத்தை பெற்று கொண்ட ரகுமான் வெளிநாட்டிற்கு அவர்களை அனுப்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் மாதவன் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு வரும் படி காவல்துறையினர் ரகுமானை அழைத்துள்ளனர். இதனையடுத்து ரகுமான் தனது வழக்கறிஞருடன் விசாரணை வந்து விட்டு மீண்டும் காரில் சேலத்திற்கு புறப்பட்டுள்ளார்.

 

கொஞ்சம் இதையும் படிங்க :   https://thenewscollect.com/on-the-occasion-of-saraswati-puja-puja-is-very-well-celebrated-in-the-office-of-the-mayor-of-thanjavur-corporation/

அப்போது தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்திஜி சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மற்றொரு கார் அவர்களை வழிமறித்து, காரில் இருந்து ரகுமானை தாக்கி அவரை கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இந்த கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review