விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூரைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 4-வது மாடியில் உள்ள கடையில் பெயிண்டு அடித்து கொண்டிருந்தார்.

அவர் கயிற்றில் தொங்கியபடியே பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததால் 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்அப்போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அய்யப்பன் சகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.