ஹரியானாவில் ஒரு பெண் வீட்டில் பதுங்கி, முகத்தை மறைக்க குடையுடன்வெளியேறிய,,,அம்ரித் பால் சிங்.

3 Min Read
அம்ரித் பால் சிங்

அரியானாவில் உள்ள ஒரு பெண் வீட்டில் அடைக்கல் புகுந்து இருந்த அம்ரித் பால் சிங், அவரது வீட்டை விட்டு வெளியே செல்லும் அடங்கிய சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளது. தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத படி, முகத்தை குடையால் மறைத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

பஞ்சாபில் கடந்த சில நாட்களாக போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையிலும் தற்போது வரை அம்ரித் பால்சிங் கைது செய்ய முடியவில்லை. இது பஞ்சாப்  போலீசாருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துவருகிறது. இந்த நிலையில் ஹரியானாவில் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அம்ரித் பால் சிங் பதுங்கி இருந்து வெளியே செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் தன்னை யாரும் பார்த்திறாமல் இருக்க, முகத்தை குடையால் மறைத்துக்கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் உள்ளார். 2021 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதலே காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கைகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

அம்ரித் பால் சிங்

மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை தற்போது அம்ரித் பால் சிங் தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது அடாவடி மற்றும் வன்முறை நடவடிக்கைகள் அந்த மாநில போலீசாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
பென்ஸ் கார் டூவீலர் மாருதி கார் என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வாகனங்களில் மாறி மாறி கடந்து செல்கிறார் போலீஸ் கண்ணில் சிக்காமல்
கடந்த மாதத்தில் இந்த அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், அமிர்தசரசில் உள்ள காவல் நிலையத்தில் போலீசரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தார். அப்போது, அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் யுத்தத்திற்கு போவது போல கைகளில் வாள்கள், துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். அப்போது பயங்கர வன்முறையும் வெடித்தது. இந்த மோதலில் போலீஸ் உயர் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதனால், நிலமையை சமாளிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை காவல்துறை விடுவித்தது.

கைது செய்ய முடியவில்லை.

எனினும், இந்த விவகாரத்தால் கடும் நெருக்கடிக்கு உள்ளான பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய தக்க சமயம் பார்த்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், தான் கடந்த சனிக்கிழமை திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாப் மாநில அரசு அம்ரித் பால்சிங்கை கைது செய்ய திட்டமிட்டது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் 78 பேரை கைது செய்ய முடிந்ததே தவிர அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை.

போலீசார் பல இடங்களில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய திட்டமிட்டு இருந்த போதும், போலீஸ் பிடியில் சிக்காமல் மறைந்து விடுகிறார் அம்ரித் பால் சிங். கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையிலும் தற்போது வரை அம்ரித் பால்சிங் கைது செய்ய முடியவில்லை. விலை உயர்ந்த சொகுசு காரில் வந்த அம்ரித் பால் சிங் காவல் துறையிடம் சிக்காமல் இருக்க சாதாரண மாருதி காருக்கு மாறி பிறகு பைக்கில் தப்பி சென்றார். சினிமா பாணியில் அம்ரித் பால் சிங் தப்பி ஓடும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அம்ரித் பால் சிங்

அரியானாவில் …

தற்போது பஞ்சாபின் அண்டை மாநிலங்களில் ஒன்றான அரியானாவில் அம்ரித் பால் சிங் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் அரியானாவில் உள்ள ஒரு பெண் வீட்டில் அடைக்கல் புகுந்து இருந்த அம்ரித் பால் சிங், அவரது வீட்டை விட்டு வெளியே செல்லும் அடங்கிய சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளது. தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத படி, முகத்தை குடையால் மறைத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு…

இதனிடையே, அரியானாவில் அம்ரித்பால் சிங்கிற்கு அடைக்கலம் கொடுத்த பல்ஜித் கவுர் என்ற பெண்ண அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 19 ஆம் தேதி பல்ஜித் கவுர், அம்ரித் பால் சிங்கிற்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அம்ரித் பால் சிங்கை கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Share This Article
Leave a review