குத்துச்சண்டை போட்டியில், இந்திய அளவில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்ற அம்மாபேட்டை போலீஸ் கான்ஸ்டபிள்.

1 Min Read
  • உத்திரப்பிரதேசம் மாநிலம் அகில இந்திய மல்யுத்த குரூப் நடத்திய குத்துச்சண்டை போட்டியில், இந்திய அளவில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்ற அம்மாபேட்டை போலீஸ் கான்ஸ்டபிள்..

கான்ஸ்டபிளை ஊக்கப்படுத்தும் விதமாக, காவல் நிலையத்தில் கேக்வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய போலீசார்..

- Advertisement -
Ad imageAd image

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (28). மனைவி நிவேதா (26), குழந்தைகள் புகழ்வர்மன் (03), லோவிகா (02), குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஹரிகிருஷ்ணன் 2017-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை காவல் நிலையத்தில் மார்ச் மாதம் 2024-முதல் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக பணியில் இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில், அகில இந்திய மல்யுத்த குரூப் நடத்தும் 73-ஆம் ஆண்டிற்கான, குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் 38-மாநிலங்களில் இருந்து, மத்திய-மாநில காவல் துறையினரும், தமிழக அளவில் 93-காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஹரிகிருஷ்ணன் குத்துச்சண்டை போட்டியில் இந்திய அளவில் முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதைப் பாராட்டும் விதமாக அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராணி மற்றும் காவல் நிலைய போலீசார், ஹரிகிருஷ்ணனை ஊக்கப்படுத்தும் விதமாக கௌரவப் படுத்தி, சால்வை அணிவித்து, தொடர்ந்து பல்வேறு மெடல்களைப் பெற வேண்டும் என வாழ்த்தி, கேக்வெட்டி, ஹரிகிருஷ்ணனுக்கு கேக் ஊட்டிவிட்டு, நினைவுப் பரிசுகளை வழங்கி அம்மாபேட்டை போலீசார் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

அம்மாபேட்டை காவல் நிலையத்தின் உள்ளே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரது பாராட்டையும் பெற்றது.

அம்மாபேட்டை காவல் நிலையத்தில், பணிபுரியும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வாங்கி முதலிடம் பிடித்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.india

Share This Article
Leave a review