தமிழிசையை கண்டித்த அமித்ஷா – கேரள காங்கிரஸ் கடும் கண்டனம்..!

0
39
தமிழிசையை கண்டித்த அமித்ஷா - கேரள காங்கிரஸ் கடும் கண்டனம்

பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித்ஷாவின் செயல்பாடு பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை அமித்ஷா கண்டித்ததற்கு கேரள காங்கிரஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். பின்னர் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தமிழிசையை கண்டித்த அமித்ஷா

இந்த நிலையில், சமீபத்தில் கட்சியின் செயல்பாடு குறித்து பேசிய தமிழிசை, “பாஜகவில் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் அதிக பேர், கட்சியில் இணைந்துள்ளனர். இது சற்று வருத்தம் அளிக்கிறது. நான் தலைவராக இருந்தால், இதற்கு அனுமதித்து இருக்க மாட்டேன்” என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு பாஜக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. இதை கண்டித்து அண்ணாமலை ஆதரவாளர்கள், தமிழிசையை கண்டித்து சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைகளில் பதிவிட்டு வருகின்றனர்.

பாஜக

ஏற்கெனவே தேர்தல் தோல்வியில் சோர்வடைந்த பாஜகவினர் மத்தியில், தமிழிசையின் இந்த கருத்து பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக பாஜகவினர், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம், “தமிழிசை கூறியது சரி தான்.

இதைத்தான் பல ஆண்டுகளாக நாங்கள் சொன்னோம்” என்று திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி தலைமைக்கும் தகவல் சென்றுள்ளது.

சந்திரபாபு நாயுடு

இதனால், அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்று முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பொறுபேற்றார்.

இந்த விழா மேடையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முகத்தை கடுமையாக வைத்தபடி தமிழிசையிடம் கடிந்து கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மேடையிலேயே தமிழிசையை கண்டித்த அமித்ஷா

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை கண்டித்த அமித்ஷாவுக்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கேரள காங்கிரஸ் கண்டித்துள்ளது. கேரள காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில்;-


தமிழிசையை கண்டித்த அமித்ஷா – கேரள காங்கிரஸ் கடும் கண்டனம்

“பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித்ஷாவின் செயல்பாடு பிரதிபலிக்கிறது. சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தக்க பதிலடி கொடுத்து விட்டு பாஜகவில் இருந்து தமிழிசை விலகி இருக்க வேண்டும்.

மருத்துவர் மற்றும் முன்னாள் ஆளுநரான தமிழிசை இதுபோன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here