கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 98 பள்ளிகள் உள்ளன இதில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளன, இன்நிலையில் இன்று வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 43 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர், இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் சாப்பாடு, சாம்பார், முட்டை வழங்கப்பட்டுள்ளது, இந்த பள்ளியில் படிக்கும் 43 குழந்தைகளும் அதை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். மேலும் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மாலை 3 மணி அளவில் ஒரு சில குழந்தைகளுக்கு லேசான தலைவலியும், வாந்தியும் மேற்பட்டுள்ளது, அதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஆட்டோ மற்றும் தனியார் வாகனத்தில் 21 குழந்தைகள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில தினங்களாக மழை பெய்து வருவதால் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாகவும், கலங்கி வருவதால் அதை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம். என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர், மேலும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டிற்க்கு அனுப்பி வைத்து வருகின்றனர். என்ன காரணத்தினால் வாந்தி மயக்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டது என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.