வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்ஆர்கே

1 Min Read
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

பட்ஜெட்டில் முக்கியமாக இடம் பெற்ற அம்சங்கள்.

- Advertisement -
Ad imageAd image

*ரூ. 14,000 கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும்
காவிரி டெல்டா பகுதியில் திருச்சி – நாகை இடையில் வேளாண் தொழில் பெருந்தடம்’ அமைக்க ரூ.1000 கோடி.
23 லட்சம் மின்னிணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை.

*காவிரி டெல்டாவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் தொடங்க ஊக்குவிப்பு; புதிய தொழிற்பேட்டைகள்; தஞ்சாவூர் புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும்.

*காவிரி படுகை பெருந்திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
23 லட்சம் மின்னிணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை.

*அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ‘மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை.

*விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ1,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும்.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

*கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைத்திட ரூ.15 கோடி ஒதுக்கீடு.

*150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்.

*உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் அமைக்கப்படும்.

*காவிரி கடைமடைக்கு பாசன நீர் செல்வதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

*பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.

*தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க ரூ. 48 கோடி நிதி ஒதுக்கீடு.

*நுண்ணீர் பாசனம் நிறுவதற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.

*10 லட்சம் குடும்பங்களுக்கு பழ செடிகள் தொகுப்பு வழங்கப்படும்.

*பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி.

*குளிர்கால காய்கறிகள் சாகுபடி மானியமாக ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு.

Share This Article
Leave a review