பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பாதாள சாக்கடை பணியால் பொது மக்கள் பாதிப்பு என கவுன்சிலர்கள் வாக்கு வாதம். பொள்ளாச்சி-ஜூலை-31 பொள்ளாச்சி நகராட்சி மாதம் கூட்டம் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருண்ன் தலைமையில் நடைபெற்றது,
இதில் துணை தலைவர் கௌதமன், தி.மு.க.அ.இதி.மு.க. ம.திமு.க, கொங்குநாடு தேசிய கட்சி என 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்,கூட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சியில்வாரத்தில் ஒருநாள் தலைவர் பொதுமக்களிடம் வார்டுகளில் உள்ள குறைகளை மனுவாக பெற்று ஒரு வாரத்தில் குறைகளை தீர்க்கபடவேண்டும் எனவும் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா சொத்துவரி குறித்து தலைவரிடம் கேட்க்கும் போதும் தி.மு.க. ம.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆவேசத்துடம் ரூ 170 கோடியில் பொள்ளாச்சி பகுதியில் கொண்டுவந்த பாதாள சாக்கடை திட்டம் வீண் எனவும் குறித்து காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்,
இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர், கவுன்சிலர்கள் தீடீரென விவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது, கூட்டத்தில் ஆணையாளர் ஸ்ரீதேவி மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்