விவசாயம் செய்ய முடியாமல் இறந்து போன விவசாய குடும்பங்களுக்கு, கடலிலே மீன்பிடிக்க போய் துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்களுக்கு, வெளிநாடுகளில் வேலை செய்கிற போது ஏற்படுகிற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பலியான ராணுவ வீரர்களுக்கு இதுவரை போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை. கள்ளச்சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்து போன குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்குவது எந்த விதத்தில் நியாயம். விக்கிரவாண்டி விவசாயம் நிறைந்த பூமி இங்கு தானியங்கள் சேமிக்க ஒரு சேமிப்பு கிடங்கு கூட இல்லை. ஆட்சியாளர்கள் உழைப்பாளர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை இந்த பகுதியில் சேமிப்பு கிடங்குகள் கட்ட வேண்டும். 1.1% சதவீதம் வாக்கு பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது 8.9% வாக்கு பெற்று இருக்கிறது. எந்த காலத்திலும் சீமான் தன்மானத்தையும் இனமானத்தையும் அடகு வைக்க மாட்டான். பாஜகவின் குறிக்கோள் ராமர் கோயில் கட்டுவது கட்டி முடித்து விட்டது இப்போது ராமர் கோயில் மழை நீரில் ஒழுகுகிறது என்ன செய்யப் போகிறது பிஜேபி. அகிலேஷ் யாதவ் பொதுத் தொகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்துள்ளார்.
திமுக வரலாற்றிலேயே எதிரியை இப்போதுதான் பார்க்கிறது. திராவிட அரசியல் என்றால் திருடுவது,வெற்று கவர்ச்சி திட்டங்களை அறிவிப்பது வாக்குக்கு பணம் கொடுக்கிறது என்பது அறிவார்ந்த மக்களை ஏமாற்றுவது. விஜய் பிரபாகரன் 4000 வாக்கு வித்தியாசத்தில் தோற்று விட்டார் என்பது அதிகாரமிக்கவர்கள் அறிவித்த அறிவிப்பு. இப்போது கனிம வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி வருகிறார்கள் தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து விட்டு சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும். கள்ளுக்கடைகளை திறப்பதில் ஆட்சியாளர்களுக்கு என்ன பிரச்சனை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு பாணம் இருக்கிறது அதுபோல தமிழ்த் தேசியத்திற்கு பாணம் தென்னம்பால் இருக்கிறது உணவின் ஒரு பகுதி கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சாராய ஆலைகளை வைத்திருப்பதால் தான் அவர்களுக்கு நட்டம் ஏற்படும் என்பதால் கள்ளுக்கடையை திறந்து தங்களுடைய வருமானம் நின்று விடாமல் இருக்க பார்த்துக் கொள்கிறார்கள்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் பொழுது அவருக்காக நாம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன் இளையும் மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியிருந்தேன் ஒருமுறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை அதேபோன்று விஜயகாந்த் ஜெயலலிதாவும் கூட்டணியில் இருக்கும் பொழுது இறுதி நேரத்தில் சென்று அவர்களுக்கு ஆதரவளித்தேன் எனவே இந்த தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை எளிய பிள்ளைகளான எங்களுக்கு அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு பேசினார் முன்னதாக விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அபிநயாவுக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்