கோடநாடு வழக்கு விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

1 Min Read
கோடநாடு வழக்கு விசாரணை

கோடநாடு வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் முக்கிய நபர்களிடம் சிபிசிஐடி போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.பின்பு விபத்தில் உயிரிழந்த கனராஜினுடைய செல்போன்களை பறிமுதல் செய்து அதில் இருக்கும் உரையாடல் மற்றும் 60 சிடிஆர் எனப்படும் கால் டீடைல்ஸ் ரெக்கார்டு பதிவுகளையும் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

- Advertisement -
Ad imageAd image
நீதிமன்ற வளாகம்

 

எனவே அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்ற நீதிபதி அவர்களிடம் கால அவகாசம் கேட்கப்பட்டது. பின்பு இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்து கொண்டிருந்த போது பிறகு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோடநாடு வழக்கு விசாரணை, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு சம்பந்தமாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான்,கனகராஜ்,சிபிசிஐடி போலிசார் மற்றும் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வாளையார் மனோஜ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜராகினர்.

வழக்கறிஞர்கள்

இவ்வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு மூலம் இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் புலன் விசாரணை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.மேலும் சிபிசிஐடி போலிசார் இவ்வழக்கு சம்பந்தமாக கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி நான்கு பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், கனகராஜின் உயிரிழப்பு மற்றும் தொலைத்தொடர்பு சம்மந்தப்பட்ட எலக்ட்ரானிக் ஆதாரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சம்மந்தப்பட்ட டவர்கள் குறித்து குஜராத் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் முக்கிய நபர்களிடம் சிபிசிஐடி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், வழக்கு விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review