ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..!

2 Min Read
ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோயில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே19 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

- Advertisement -
Ad imageAd image

ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோயில் பஞ்ச ரெங்களுள் மூத்த ரெங்கம் ஆதிரெங்கம் ஆகும். பெருமாள் உலகை படி அளந்து வந்து கொண்டிருக்கையில் பொழுதாகி விட்டதால் மரக்காலை தலையணையாக கொண்டு வீற்றிருக்கிறார். சீரங்கத்தில் பெருமாள் பாம்பை படுக்கையாக கொண்டு வீற்றிருப்பதைப் போல ஆதிரெங்கத்தில் பெருமாள் மரக்காலைக் கொண்டு வீற்றிருக்கிறார்.

ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவில், அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி சன்னதிகளும், சக்கரத்தாழ்வார் ஆண்டாள் பஞ்சமுக ஆஞ்சநேயர் கருடாள்வார் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோவில் குளம், கோவில் தேர் போன்றவை உள்ளன. இந்த கோயில் முதன்மைத் திருக்கோவில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோவிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் சொர்க்க வாசல் திறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் பிரம்மோற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோவில் பதினான்காம் நூற்றாண்டைச்  சேர்ந்த புனிதமான கோவில் ஆகும்.

இந்த கோவிலில் கடந்த மாதம் முதல் கோவிலுக்கு செய்யும் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்து நிலையில், இன்று காலை ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவிலில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோவிலில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு தரிசனம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலை சுற்றி வந்து கலசத்தை எடுத்து புனித நீர் கொண்டு வரப்பட்ட கும்பத்தில் ஊற்றப்பட்டு அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி உடனுறை ரெங்கநாதபெருமாளுக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

இதனை தொடர்ந்து மூலவரான ஆதிரெங்கம் ரெங்கநாத பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனை அடுத்து ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

Share This Article
Leave a review