பேசப்படும் வேட்பாளர்கள்-வேலூர்

2 Min Read

வேலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 8வது தொகுதி ஆகும்.இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

- Advertisement -
Ad imageAd image

 

 

 

அவைகள்:

வேலூர்
அணைக்கட்டு
கே. வி. குப்பம் (தனி)
குடியாத்தம் (தனி)
வாணியம்பாடி
ஆம்பூர்

கதிர் ஆனந்த்

இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்த்துவர்கள், முதலியார்கள், வன்னியர்கள் வலிமையாக உள்ளார்கள். இஸ்லாமியர்கள் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன.1957க்கு பின் நிலைமை மாறத் தொடங்கியது. 1967ல் இந்த தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்று இங்கு தனது கணக்கை தொடங்கியது. அதுமுதல் திமுக அல்லது திமுகவோடு கூட்டணி வைப்பவர்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்று வந்தனர், வருகின்றனர். 1967ல் திமுகவின் குசேலர், 1971ல் திமுகவின் உலகநம்பி, 1977ல் காங்கிரஸ்சின் தண்டராயுதபாணி, 1980ல் சுயேட்சை சின்னத்தில் அப்துல்சமத், 1984ல் ஏ.சி.சண்முகம், 1989ல் காங்கிரஸ்சின் அப்துல்சமத், 1991ல் காங்கிரஸ்சின் அக்பர்பாஷா, 1996ல் திமுக அகரம்சேரி சண்முகம், 1998 மற்றும் 1999ல் பாமக என்.டி. சண்முகம், 2004ல் திமுக சின்னத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், 2009ல் திமுக சின்னத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் அப்துல்ரஹ்மான், 2014ல் அதிமுகவின் செங்குட்டுவன் என வெற்றி பெற்றனர்.2019 ல் கதிர் ஆனந்த் திமுக வை சேர்ந்தவர்.திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன் ஆவார்.

அந்த வகையில் காங்கிரஸ் 6 முறையும், திமுக 4 முறையும், திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் 4 முறையும், அதிமுக இரண்டு முறையும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து பாமக தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

ஏ.சி சண்முகம்

கடந்த முறை வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற ஏ.சி சண்முகத்திற்கு இந்த முறை பாஜக சீட்டு வழங்க தயாராக உள்ளது.கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அவர் இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்று பேசப்படுகிறது.

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு இந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

நாம் தமிழர் முருகன்

மேலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது அந்த வகையில் வேலூர் தொகுதியில் போட்டியிட பட்டதாரி இளைஞரான சே முருகன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது நாம் தமிழர் கட்சி.

காதர் மொய்தீன்

முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் இந்த தொகுதியில் இந்திய முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது அதன் தலைவர் காதர் மொய்தீன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

அதிமுக ராமு

அதிமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனை எதிர்த்துப் போட்டியிட்ட ராமு என்பவர் கதிர் ஆனந்துக்கு எதிராக களம் இருக்கப்படுவார் என்று பேசப்படுகிறது மேலும் அதிமுக சார்பில் முன்னாள் பேரணாம்பட்டு சேர்மன் பிரபாகரன் களமிறக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.கூட்டணி முடிவானதும் இவற்றுக்கு விடைகிடைக்கும்.

Share This Article
Leave a review