திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் முதியவரை ஒருவரை இளைஞர் ஒருவர் தாக்கும் காட்சி இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சன்னதி வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் முகேஷ் குமார் வயது (30). இவர் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளில் புகுந்த பாம்புகளை பிடித்து பிரபலம் ஆனவர். இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் பழனி சன்னதி வீதியில் சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் நடந்து சென்ற போழுது முதியவரிடம் தகராறு செய்து, தாக்கியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் உயிருக்கு பயந்து முதியவர் ஓடி சென்று தஞ்சமடைந்த நிலையில், அவரை வெளியே அனுப்ப சொல்லி போதை இளைஞர் தகராறு செய்வதும், முதியவரை வெளியே அனுப்பாமல் டீக்கடையில் பணிபுரிபவர் இளைஞரை தடுத்து முதியவரை காப்பாற்ற முயர்சிக்கிறார்.
ஆனால் போதை இளைஞர் அவர்களை மீறி உள்ளே சென்று முதியவரை கடுமையாக தாக்குவது காட்சி இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டீக்கடை சார்பில் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் ஆதாரத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணையில் முதியவரை தாக்குவது பாம்புபிடிக்கும் முகேஷ் குமார் என்பது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதியவரை தாக்கும் சிசிடிவி விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழனி பகுதியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் அதிக விற்பனை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது முதியவர் ஒருவரை போதையில் தள்ளாடும் இளைஞர் ஒருவர் தாக்குவது அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.