தமிழ் திரைப்பட நடிகை ஷகிலா பல படங்களில் நடித்து வந்ததவர்.பல யூடிப் சேனல்களில் நேர்கானல்களும் நடத்தி வருபவர் இவர்.இந்த நிலையில் இவர் தாக்கப்பட்டார் என்ற செய்தி பரவி வருகிறது.சகீலா (பிறப்பு: சனவரி 1977) குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இவர் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.

மலையாளா திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்திரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேகிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கோடம்பாக்கம் யுனைடெட் காலனி முதல் குறுக்கு தெருவில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இவர் தனது அண்ணன் மகளான சீத்தல் (19) என்பவரை 6 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே, தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஷகிலாவின் அண்ணன் இறந்த நிலையில், சீத்தலின் தாய் சசி மற்றும் அவரது அக்கா ஜமீலா ஆகியோர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு மகள் சீத்தல் ஆகியோர் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், சீத்தல் ஷகிலாவை தாக்கிவிட்டு தனது தாய் சசி வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷகிலாவின் தோழி, கோடம்பாக்கம் கங்கா நகரைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சவுந்தர்யாவிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகை ஷகிலா வீட்டுக்குச் சென்ற வழக்கறிஞர் சவுந்தர்யா, சீத்தலை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சமாதானம் பேசவருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, சீத்தல் அவரது தாய் சசி மற்றும் அக்கா ஜமீலா ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில், சீத்தல் அருகிலிருந்து சிறிய பொருளை எடுத்து, சவுந்தர்யாவின் தலையில் தாக்கியதாகவும், சீத்தலின் தாய் சசி, வழக்கறிஞரின் வலது கையில் கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.