மறைந்த புகழ்பெறும் தெலுங்கு நடிகர் என்.டி ராமாராவ் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது .
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , “ஹைதராபாத் நகரம் ஒட்டுமொத்த இந்திய நாட்டையே பிரமிக்கும் வகையில் தொழில்நுட்பத்தில் வளர்ந்து இருப்பதற்கு முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தான் காரணம்” என்று புகழாரம் சூட்டி இருந்தார் .
இதை நடிகை ரோஜா மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார் . நேற்று புதுச்சேரி வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி நந்தீஸ்வரர் ஆலயத்திற்குத் தரிசனம் செய்ய வந்திருந்த ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா “காசிக்கு நிகரான அமைந்துள்ள இந்த நதீஸ்வரர் ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் எனக் கேள்விப்பட்டுத் தரிசிக்க வந்துள்ளேன்” என்று தெரிவித்தார் .மேலும் ரஜினிகாந்த் குறித்து அவர் பேசியபோது , ரஜினி அவர்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முடிவு செய்த பிறகு , அரசியல் பேசாமல் ஒதுங்கியிருக்க வேண்டும் .

நடிகர் என் டி ராமராவின் மரணத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்று ஒரு சந்தேகம் உள்ள நிலையில் அவரது பிறந்த நாள் அன்றே துரோகி எனக் கருதப்படும் சந்திரபாபு நாயுடுவைப் புகழ்ந்து இருப்பது ஆந்திரா மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற நிலைப்பாடுள்ள ரஜினிகாந்த் , தெலுங்கு மாநில அரசியல் மட்டும் இல்லை , எந்த மாநில அரசியலும் பேசக் கூடாது
இதுபோல் தனக்கு முழுமையாகத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து தான் ஹீரோவாக இருந்த ரஜினி தற்போது ஜீரோவாக மாறியுள்ளார் . எந்த நடிகராக இருந்தாலும் சரி வேறொரு மாநிலத்திற்குச் செல்வதற்கு முன் அந்த மாநில உண்மை நிலை அறியாமல் வார்த்தையை விடக் கூடாது . இதற்கு அவர்கள் மௌனமாக இருப்பதே சிறந்ததாக இருக்கும் .
வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைத் தோற்கடிக்க சந்திரபாபு நாயுடு முதலில் நடிகர் பவன் கல்யாணைப் காய்யாக பயன்படுத்தினார் இப்போது ரஜினிகாந்த்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார் , இது அனைத்தும் பயனற்ற முயற்சியே . எதனைப் பேர் சேர்ந்து வந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியாது. என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் .
மேலும் ரஜினிகாந்தை “திரைக்கு முன்னாள் மட்டும் இல்லாமல் , திரைக்கு பின்னாலும் ரஜினி ஒரு நடிகராகவே செயல் பட்டுவருகிறார்” என்று ரோஜாவின் டிவீட்டுக்கு முன்னாள் முதல் அமைச்சர் சந்திராபாபு நாயுடு கண்டனத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது .