சென்னை கெரும்கம்பாக்கத்தில் குன்றத்தூரில் பேருந்து நடத்துநர், ஓட்டுநரை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் ரஞ்சனா கைது.
சென்னை கெரும்கம்பாக்கத்தில் குன்றத்தூரில் அரசு பேருந்தில் படிகட்டில் தொங்கிய படி சென்ற பள்ளி மாணவர்களை அடித்து தாக்கியதாக புகார். நடிகை ரஞ்சனா நானும் போலிஸ் என்று கூறிக்கொண்டு, சென்னையில் அரசுப் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி, பொது இடத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தாக்கியதாக பாஜகவை கட்சியை சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் விவகாரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மேலும் தனது மகள் மீது மாமனார் மற்றும் மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்த ஆண்டு மாங்காடு காவல் நிலையத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு புகார் கொடுத்திருந்தார். இப்போது நடிகை ரஞ்சனா நாட்சியார் என்பவர், அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களைத் தாக்கியும் உள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசி சண்டை இழுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அப்போது எல்லாரும் சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்.? சட்டம் எதற்கு? போலிஸ் எதற்கு? நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு? என்ற பொதுமக்களிடம் கேள்விகள் எழுந்தன. அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இயக்குநர் பாலாவின் உடன் பிறந்த அண்ணன் மகளான நடிகை ரஞ்சனா நாச்சியார், ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

டைரி படத்தில் இவர் பேசிய, “போலிஸ்னா அடிப்பீங்களா” என்ற வசனமும் பிரபலமானது.கைது செய்யவந்த காவல்துறையினருடனும் நடிகை வாக்குவாதம் செய்தார். கைது ஆணை இருக்கிறதா? என்ன காரணத்துக்காக கைது செய்கிறீர்கள்? என்றெல்லாம் வினவினார். அந்தக் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக பாஜகவிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.