- உயர் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி தனது படங்கள் வெளிவரும்போதெல்லாம் தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் தன்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கோட் படத்திலும் நடித்துள்ளார். நடிகை பார்வதி நாயர், தனது வழக்கறிஞர் ஏ.சரவணன் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2022 ம் ஆண்டு தன்னுடைய வீட்டில் இருந்த18 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் திருட்டு போன வழக்கில் தனக்கு உதவியாளராக இருந்த சுபாஷ், உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது புகாரை திரும்ப பெறும்படி சுபாஷ் தனக்கு மிரட்டல் விடுத்ததோடு, தனக்கெதிராக காவல் நிலையத்திலும் பொய்யான புகார் அளித்தார் என்றும், தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட வெளிவராத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும், பெயரை அவமதிக்கும் வகையில் பல பொய் செய்திகளை வெளியிட்டும் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், இதே போல் சுபாஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சுபாஷ் தன்னை பற்றி பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த 2023 ம் ஆண்டு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார் .
ஆனாலும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து சுபாஷ் தன்னை பற்றி, அவதுறான, பெய்யான தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கி வருவதாகவும், வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில்,
தனது வீட்டில் சுபாஷ் சாதி ரீதியாக நடத்தப்பட்டதாக அவரின் வழக்கறிஞரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் கேட்டும், இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என நோட்டீஸ் அனுப்பபட்டதாக தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து தன்னுடைய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் இவ்வாறு சுபாஷ் தரப்பால் மிரட்டப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். சுபாஷ் மீதான புகாரை திரும்ப பெற்று, 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தொடர்ந்து சுபாஷ் தரப்பினரால் மிரட்டப்பட்டு, கொலை மிரட்டலும் விடப்பட்டதாக கூறியுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/in-perur-a-case-has-been-filed-against-the-permission-of-the-tamil-nadu-governments-plan-to-turn-sea-water-into-drinking-water/
கடந்த செப்டம்பர் மாதம் சுபாஷ் அளித்த புகாரில் தன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாகவும், சட்டத்தையும், சமூக ஊடகங்களையும் தவறாக பயன்படுத்தி தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தன்னிடம் உதவியாளராக இருந்த சுபாஷ் செய்து வருவதை மக்களிடம் தெரிவித்து கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.