- கமல் மற்றும் சிம்பு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தக் லைப். மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
AR ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது தக் லைப் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/is-world-war-3-breaking-out-israel-attacks-5-islamic-countries-at-the-same-time-world-countries-panic/
ஆனால் தற்போது இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.