நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.காவுக்கு பிரச்சனை இல்லை- அர்ஜுன் சம்பத்

2 Min Read
மேற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி

இந்து மக்கள் கட்சி சார்பாக  இந்து தர்மம் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டமானது,திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது திமுக அரசானது தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இந்து கோவில்களை இடித்து இந்துக்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

- Advertisement -
Ad imageAd image

மேலும்,இந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று விட்டு சாமியை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்றும் காணிக்கைகளை
உண்டியலில் செலுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து: நம் நாட்டிலே பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். பொது சிவில் சட்டத்தின் மீது திமுகவினர்  பரப்புகிற பொய்களை முறியடிக்க வேண்டும்.பொது சிவில் சட்டமானது முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது  அல்ல அது எல்லாம் மதத்திற்கு பொதுவானது. ஏற்கனவே
இந்த சட்டமானது கோவா மாநிலத்திலும் மற்றும் முஸ்லீம் நாடுகளிலும் தற்பொழுது  அமலில் உள்ளதாகவும் கூறினார்.

மேற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி


தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, தக்காளி விலை உயர்வு,
சாராய சாவு உள்பட பல விஷயங்கள் நட ந்து கொண்டு இருக்கிறது. மதுபான கடைகளை முழமையாக ஒழிக்க வேண்டும்.தமிழகத்திலே நல்லதோரு  ஆட்சியினை கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலைக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் படி பாரத ஜனதா கட்சியின் மணிப்பூர் முதலமைச்சர் விரைவில் நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகளை  ஆளும் கட்சியான  திமுக அரசானது இதுவரை கண்டுபிடிக்க முடியாத அரசாக விளங்கி வருகின்றது.இந்நிலையில் மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டிக்கும் விதமாக திமுக அரசு ஆர்ப்பாட்டம் நடத்துவதெல்லாம் வெறும் நாடகம் என்றும் திரைப்பட நடிகை விஜய் அரசியலுக்கு வருவது நாங்கள் வரவேற்கிறோம்.விஜய் அரசியலுக்கு வருவதால் பாரத ஜனதா கட்சிக்கு எந்த ஒரு பிரச்சனை இல்லை.விஜய் ஒரு பெரிய திரளான ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார்.ரசிகர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமை ஆகாமல்  சமூகத்தில் உள்ள
மக்களுக்கு உதவுகிற ரசிகர் கூட்டமாக மாற வேண்டும் என்கிற கருத்தையும் முன் வைத்தார். இதனையடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடியை கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a review