நடிகர் பாலா நிவாரணம்
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும் உதவி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பாலா சென்னை மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
விஜய் டிவி பிரபலம் பாலா ஏற்கனவே ஆம்புலன்ஸ் தனது சொந்த செலவில் வாங்கி உதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த செய்தார்.அதன்படி, சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். அவருடைய அக்கவுண்டில் மொத்தமே 2 லட்சம் ரூபாய் தான் இருந்ததாகவும் அதை 200 குடும்பங்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகள் கூறினர்.

நடிகர் தாடி பாலாஜி வாழ்த்து
இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி நடிகர் பாலாவின் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார். அது மட்டும் அல்லாமல் அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். மனிதநேயமிக்க நடிகர் பாலாவின் செயல் பாராட்டத்தக்கது எனவும், தொடர்ந்து இதுபோல அனைவருக்கும் உதவும் திறனோடு தம்பி பாலா இருக்க வேண்டும் என்றும். நடிகர் தாடி பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தம்பி பாலாவின் இந்த மனிதநேயமிக்க செயல் எல்லோருக்கும் ஒரு முன் உதாரணமாக அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பல சினிமா நட்சத்திரங்கள் மக்களுக்கு அவர்களின் கடினமான வாழ்க்கையின் போது உதவ முன்வந்துள்ளனர், மேலும் அவர்கள் தேவைப்படும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குகிறார்கள். சினிமா நட்சத்திரங்கள்’ ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களை மீட்பதிலும், தேவையான பொருட்களை வழங்குவதிலும் ரசிகர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தாடி பாலாஜி பற்றி நடிகர் பாலா
ஆரம்பத்தில் நல்ல துணி கூட போட்டுக்க இல்லாமல் இருந்த தனக்கு தனது நண்பர் ஒருவரை போய் சந்திக்க தாடி பாலாஜி அண்ணா சொன்னார். அவரிடம் போனால் ஒரு பை நிறைய புதிய துணிகளை தாடி பாலாஜி கொடுக்க சொன்னதாக சொல்லிக் கொடுத்தார். விஜய் டிவியில் இருக்கும் போது தாடி பாலாஜி அண்ணா எனக்கு செய்த உதவி தான் நாமும் காசு வந்தால் சேர்த்துக்கிட்டே போகக் கூடாது என்றும் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் நல்லா இருக்கலாம் என என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.