விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்த குற்றவாளி கைது பணத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்.

2 Min Read
கொலைசெய்யப்பட்ட தம்பதியினர்

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் வசித்து வந்தவர்கள் ராசன், உமாதேவி தம்பதியினர் இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் புதுச்சேரியில் வசித்து வரும் இந்த சூழ்நிலையில் இருவரும் வளவனூரில் உள்ள வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளனர்.பெரும்பாலும் யாருடனும் இருவரும் அதிகம் பேசிக்கொள்வதில்லை.கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.அதனால் இருவரும் பேசிக்கொள்வதில்லை என கூறப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image
புருஷோத்தமன்

இந்த நிலையில் மாலையில் பால் வாங்குவதற்கு கூட வழக்கமாக வருகின்றவர்கள் வரவில்லை. அத்துடன் வீட்டின் தெருவிளக்குகள் போடாமல் இருளில் வீடு இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டினர் விளக்கை போடுவதற்கு வீட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது விளக்கை போட்டவுடன் இருவரும் மயங்கி நிலையில் அறைக்குள்ளே இருந்தது கண்டு அக்கப் பக்கத்தினரை அழைத்துள்ளனர். வந்து பார்த்தபோது இருவரும் இறந்து போனது தெரிந்தது .உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் வளவனூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தம்பதியினர் இருவரும் ஒரே நேரத்தில் உடல் நலக் கோளாறு காரணமாக இறக்க வாய்ப்பு இல்லை. யாரோ இவர்களை கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டனர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.மேலும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் காவல்துறை ஈடுபட்டது.பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.அவர்களது மகன்,மகள் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

ராசன்

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.புருஷோத்தமன் அடிக்கடி ராசனுடன் தனியாக வந்து பேசுவது வழக்கம் அப்பப்போது ராசனிடம் அவர் பணம் வாங்குகிற பழக்கமும் உண்டு,அதுமட்டுமல்லாமல் புருஷோத்தமனுக்கு சூதாட்ட பழக்கம் உண்டு. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட புருஷோத்தமன் ராசனிடம் அதிக அளவு பணம் கேட்டுள்ளார் ராசன் பணம் தர மறுக்கவேகொலைசெய்துள்ளார்.அவரே போலீசிடம் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இறந்து போன ஆசிரியை ராசனுடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது இந்த நிலையில் அதிகப்படியான பணம் கேட்டதால் தர மறுத்த ஆசிரியரை கொலை செய்து அதன் பின்னர் அதை தட்டி கேட்ட அவரது மனைவியையும் கொலை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் கைது செய்யப்பட்ட புருஷோத்தமன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Share This Article
Leave a review