உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திய இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜுன் குமார் – கமலினி தம்பதி . இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே.அய்யம்பாளையத்தில் தங்கி ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அர்ஜுன் குமார் கமலினி தம்பதியர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அதே வார்டில் உள்ள மற்றொரு பெண்ணுக்கு உதவியாளராக இருப்பதாக கூறி கமலினியிடம் அறிமுகமாகியுள்ளார் உமா என்ற பெண்மணி .
உமாவை பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது : கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்துள்ளார்உமா . அதே நிறுவனத்தில் பணி புரிந்த விஜய் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது நாளடைவில் அப்பழக்கம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.திருமணம் ஆகி ஒரு வருடங்கள் கடந்த நிலையில். இத்தம்பதியர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த உமா. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அர்ஜுன் கமலினியிடம்நல்லவர் போல் நடித்து அவர்களது பச்சிளம் குழந்தையை கடத்தி சென்றுள்ளார் .
பின் அங்கிருந்து கல்வராயன்மலை அடிவாரத்தில் பரங்கிநத்தம் என்னும் கிராமத்தில் வசிக்கும் தனது தோழி ராணியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு , தான் அங்கு வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தங்களது குழந்தையை கடத்தப்பட்டதை அறிந்த தம்பதியினர், திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுது தங்களுக்கு உதவியாக இருந்த உமா பற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். சந்தேகத்தின் பெயரில் போலீசார் உமாவின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது நீண்ட நேரமாக சுவிட்ச் ஆப் வில் இருந்தது.
கடைசியாக கள்ளக்குறிச்சியில் செல்போன் சிக்னல் காண்பித்தது. உமாவின் கணவர் விஜய் ஆனந்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது உமா தனது தோழி ராணி வீட்டில் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார் . உடனே தனிப்படை சம்பவஇடத்துக்கு விரைந்தனர்.
தொடர்ந்து போலீசார் உமாவிடம் விசாரணை மேற்கொண்ட போது. அக்குழந்தை தன்னுடையது என்றும் பத்து தினங்களுக்கு முன்னர் தான் பிரசவித்ததாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை அடுத்து போலீசார் உமா மற்றும் குழ்ந்தையை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு மருத்துவர்களால் பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாகவில்லை என்றும் சமீபத்தில் குழந்தை ஏதும் பெற்றெடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
மேலும் குழந்தைக்கு 10 மணி நேரத்துக்கு மேல் பால் கொடுக்காமல் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் உமாவை கைது செய்த போலீசார் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை பிற்பகல், 2.30 மணியளவில் குழந்தையை திருப்பூர் அழைத்துச் சென்றனர்.
திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை, 20 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.