தஞ்சாவூர் மாவட்டம், ஹோமோசெக்ஸ் உறவுக்கு மறுத்த இளைஞரை, கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த சித்த வைத்திரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் வயது 27. இவர் திருமணம் ஆகாதவர். அசோக்ராஜ் சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு, சென்னைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். அசோக்ராஜன் சென்னை சென்று விட்டாரா என கேட்பதற்காக, இவர் பாட்டி பத்மினி என்பவர் அவரது மொபைலுக்கு உறவினர் ஒருவர் மூலம் தொடர்புக்கொண்டார். ஆனால், அசோக்ராஜன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சோழபுரம் போலீசில், கடந்த 13-ம் தேதி பாட்டி பத்மினி புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில், போலீஸார் சோழபுரம் கடைத்தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்றவர். மீண்டும் திரும்பாதது விசாராணையில் தெரியவந்தது. இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு, ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனக்கு ஆண்மை இல்லாமல் இருப்பதால் வாழ பிடிக்கவில்லை என்று அசோக்ராஜன் எழுதியதாக இருந்தது. ஆனால், அது அசோக்ராஜன் கையெழுத்து இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அசோக்ராஜன் ஊருக்கு வரும் போது, சோழபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சித்த வைத்தியரான கேசவமூர்த்தி வயது 47. இவரிடம் சிகிச்சை பெற்றதாக தெரியவந்தது.

இந்த சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் மற்றும் இவரது உறவினர்கள் அப்பகுதியில் விசாரணை நடத்திய போது, கேசவமூர்த்தியும், அசோக்ராஜன் இரண்டு பேரும் நெருங்கிய தொடர்பில் இருந்தது விசாராணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கடந்த 17ம் தேதி, கேசவமூர்த்தியை போலீசார் அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும், அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி, என்னிடம் அழுதார். பின்னர் நான் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதை காரணமாக வைத்து, அசோக்ராஜனை ஹோமோசெக்ஸ்க்கு அழைத்தேன்.

அவர் மறுத்த நிலையில், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்தேன். அந்த மருந்தை சாப்பிட்ட நிலையில் இறந்தார். அதன் பிறகு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆர்.டி.ஓ. பூர்ணிமா, திருவிடைமருதுார் டி.எஸ்.பி. ஜாபர்சித்திக், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜனின் உடலை வெளியில் எடுத்து, அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் சிலர் மாயமானது தொடர்பாக, சித்த வைத்தியர் கேசவமூர்த்தியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அவரது வீட்டின் பின்புறம் ஏதேனும் உடல் புதைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக ஆய்வு செய்த போது, கடந்த ஆண்டு காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த அனஸ் என்ற இளைஞரை இதேபோல் அதிக அளவில் மருந்து கொடுத்து கொன்று புதைத்ததை கேசவமூர்த்தி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் கேசவமூர்த்தி வீட்டில் தோண்டிப் பார்த்தபோது அனஸ் காணாமல் போனது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் உடன் கூடிய தாடை பகுதி ஒன்று கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதனால் அனஸ் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.