வெட்டி படுகொலை
காரைக்குடியில் நிபந்தனை ஜாமின் போட வந்த இளைஞரை,வெட்டி கொலை செய்து காரில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமோகூரைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித் 29. இவர் காரைக்குடியில் நடந்த ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவர் காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேசனுக்கு நிபந்தனை ஜாமின் போடுவதற்காக தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் காரைக்குடியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி உள்ளார். நேற்று காலை நிபந்தனை ஜாமின் போடுவதற்காக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அறிவழகன் என்ற வினீத்தை காரில் வந்த மர்ம கும்ப கும்பல் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி போலீசார் படுகாயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.