தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்..

1 Min Read
மதுரை உயர் நீதிமன்றம்
  • தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி   அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இந்த வழக்கில் மனுதாரர் 20 வயதானவர். இவரும் 19 வயது இளம் பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சந்தித்தபோது இரவு வெகு நேரம் பேசியுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
 

அப்போது மனுதாரர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி மனுதாரர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.காதலிப்பவர் கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த வரக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையினர் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

இந்த வழக்கையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது.ஆகவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும், கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Share This Article
Leave a review