சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உட்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் சிறுத்தை மான் புலி போன்ற உயிரினங்கள் வசித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடம்பூரில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கடம்பூரில் இருந்து இண்டியம்பாளையம் செல்லும் சாலையில் 12-வது மைலில் அவ்வழியாக வந்த வாகன ஓட்டியின் மோட்டார் சைக்கிளை துரத்தியது.

இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தனது மோட்டார் சைக்கிளை அச்சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.
தொடர்ந்து வந்த காட்டு யானை பிலிறிக்கொண்டு வந்து கால்களால் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தும் தந்ததால் கீழே தள்ளிவிட்டும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியது.
இதுகுறித்து கடம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் யானையை அப்பகுதியில் இருந்து விரட்டியதை அடுத்து யானை அந்த இடத்தில் இருந்து சென்ற பிறகு விரட்டிய வாகன ஓட்டி மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார்.