நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது,
இந்நிலையில் பரலியார் கே என் ஆர் மரப்பாலம் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் யானைகள் முகாமிட்டுள்ளது இது அடிக்கடி சாலைக்கு வருவது வழக்கம் இதனால் குன்னூர் வனத்துறையினர் நாள்தோறும் யானைகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மரப்பாலம் இச்சிமரம் பகுதியில் சாலையை கடக்க வந்த ஒற்றைக்காட்டு யானை வனத்துறையினர் கூறுவதைக் கேட்டு சாலையை கடந்து சென்றது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது