நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன்

1 Min Read
எரியும் வேன்

உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் ரோந்து பணியில் இருந்த நெடுஞ்சாலை வாகனத்தில் மீது குளிர்சாதனம் பொருந்திய டாட்டா ஏசி வாகன மோதி டாட்டா ஏசி வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் படுகாயம் 5 லட்சம் மதிப்புள்ள இறால் மீன்கள் தீயில் கருகின. இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு…

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூரில் இருந்து  குளிர்சாதன பொருந்திய டாட்டா ஏசி வாகனத்தில் ஐந்து லட்சம் மதிப்புள்ள இறால் மீன்கள் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றது.  இந்த வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அசார் என்பவர் ஒட்டி வந்த போதும் அவருடன் சையத் அபூபக்கர் என்பவரும் உடன் வந்தார். அப்போது  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் டாட்டா ஏசி வாகனத்தின் முன் பகுதியில் புகை வந்ததை அறிந்த  ஓட்டுனர் உடன் வந்தவரும்  படுகாயத்துடன் வாகனத்தை விட்டு வெளியேறினர்.

எரியும் வேன்

சிறிது நேரத்தில் குளிர்சாதனம் பொருந்திய டாட்டா ஏசி வாகனம் தீ பற்றி தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எறிந்தது பணியில் இருந்த ரோந்து போலீசார் படுகாயம் ஏற்பட்டவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரை பீச்சடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தீப்பற்றி வாகனத்தை தீயணைத்து அந்த வாகனத்தை அப்புறப்படுத்தப்பட்ட பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலை வாகனத்தின் மீது மோதிய குளிர்சாதனம் பொருந்திய டாட்டா ஏசி வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article

Leave a Reply