நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் என்ற பகுதியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு தேங்காய் நார் ஏற்றுக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை ஆவங்குளத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். லாரி சுமார் இரவு 8.30 மணியளவில் சேரன்மகாதேவி அடுத்த மேலச்சேவல் வாணியங்குளம் என்ற பகுதியில் வந்த போது மேலே சென்ற மின் வயரில் லாரியில் இருந்த தேங்காய் நார்கள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது எரிய தொடங்கியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் தேங்காய் நார்கள் தீ மளமளவென பிடித்து இதில் லாரியிலும் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் லாரியை ஓட்டி வந்த டிரைவர் விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த சேரன்மாதேவி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. திடீரென லாரி தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது…