பிழைப்புக்காக வந்த இடத்தில் பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்கள். பேட்டரி கடையின் விளம்பர பேனர் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி எரிந்து உயிரிழந்த பெங்களூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள். காவல் துறை விசாரணை.

வேலூர் மாவட்டத்தில் ஜி.ஆர்.பகுதியில் பாளையத்தை சேர்ந்த சரவணன் வயது (37) என்பவர் ஊசூர், குளத்துமேடு பகுதியில் சொந்தமாக எஸ்.வி.எம் ஆயில் மற்றும் வாகனங்களுக்கான பேட்டரி விற்பனை கடை வைத்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தனியார் ஆயில் நிறுவனத்தின் (கேஸ்ட்டார் ஆயில்) விளம்பர பேனர் வைக்கும் தனியார் ஆயில் நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேர் சரவணன் கடையின் இரண்டாவது மாடி மீது ஏறி அந்நிறுவனத்தின் சுமார் 10 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட விளம்பர பேனரை பொறுத்தும் பணியில் இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பேனரின் கம்பிகள் கட்டிடத்தின் அருகே சென்ற மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் பெங்களூரை சேர்ந்த சலீம் வயது (25), கௌஷிக் வயது (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி தீ பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட பொது மக்கள் உடனடியாக காவல் துறை மற்றும் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்ததோடு தீயை அணைத்துள்ளனர். அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் காவல் துறையினர் தீயில் எரிந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.