- உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வண்ண வண்ண கோலம் இட்ட பெண்கள். பெரிய கோவில் முன்பு நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் பங்கு பெற்ற கோலப்போட்டி நடைபெற்றது 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலங்களை இட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியராக அருங்காட்சிய வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் தஞ்சை பெரிய கோவில் தலையாட்டி பொம்மை பூக்கள் தாஜ்மஹால் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை வண்ணங்களால் கோலமாக விட்டனர் இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் மாணவர்கள் கண்டு களித்தனர். இதேபோல் தஞ்சை பெரிய கோவில் முன்பு சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் வாழ் வீச்சு சுருள்வாச்சில் வீச்சு உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகளும். கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கிராமப்புற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சுற்றுலாத்துறை மற்றும் intok அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.