- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இன்று அதிகாலையில் அருகில் இருந்த கொட்டகையில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த கொட்டகையில் இருந்த உரம், வைக்கோல், அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிகள், ட்ராக்டர், டிப்பர், மாருதி 800 கார், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/tourists-thronged-tourist-spots-in-tanjore-on-the-occasion-of-the-holiday/
அதிர்ஷ்டவசமாக தீப்பிடித்த கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் அவிழ்த்து விடபட்டதால் அவை உயிர் தப்பியுள்ளன. இந்த தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதால், அதற்கு உரிய நிவாரணம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.