சாலையோரத்தில் ஓய்வெடுத்த புலி சாலையில் சென்றவர்கள் எடுத்த வீடியோ பதிவு,

1 Min Read
புலி

நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சோலூர்   அருகே உள்ள முத்தநாடு மந்து காமராஜர் சாகர் அணை அருகே புலி ஒன்று அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களின் எருமைகளை அடிக்கடி வேட்டையாடி வந்தது,

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் நேற்றைய முன்தினம் அப்பகுதியில் வளர்ப்பு எருமையை புலி வேட்டையாடி விட்டு சாலை ஓரத்தில் உள்ள புதரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது,

ஓய்வெடுக்கும் புலி

இதனை அப்பதியில் உள்ள இளைஞர்கள் டார்ச் லைட் அடித்து வீடியோ பதிவு செய்தனர் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது மேலும் பழங்குடியினரின் எருமைகளை வேட்டையாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க முத்தநாடு மந்து மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அந்த சாலையில் மக்கள் அச்சத்துடனே பயணிக்கின்றனர.்

Share This Article
Leave a review