- சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவன்.
தஞ்சாவூர் கீழவாசல் பூமாலை ராவுத்தர் கோவில் தெருவை சேர்ந்த மாணவன் கோவர்தனன். இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் சிறுவயதிலிருந்தே சிலம்பம், வால் வீச்சு, உள்ளிட்ட தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதன் விளைவாக 4ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மாவட்டம்,மாநிலம், தேசிய அளவில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். இந்த நிலையில் பாரம்பரிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச அளவில் புதுச்சேரியில் நடைபெற்றது.
இப் போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் கோவர்தன், சப் ஜூனியன் ஒற்றை வால் பிரிவில் தங்கப்பதக்கமும், சிலம்பத்தில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தொடர்ந்து நான் மேற்கொண்ட கடினமான பயிற்சியால் மட்டுமே என்னால் பரிசுகளை பெற முடிகிறது என்றும், மேலும் பல்வேறு தற்காப்புக் கலைகளை கற்று திறம்பட மாறுவேன் எனவும் மாணவன் கூறினார்.
மேலும் இது குறித்து பயிற்சியாளர் நிர்மலா கூறுகையில்..
நான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவள். கீழவாசல் பகுதியில் சிலம்ப அகாடமியை நடத்தி வருகிறேன்.என்னிடம் 150 மாணவர்கள் சிலம்ப பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது எல்லோராலும் முடியும் என்றாலும், அதை எத்தனை பேர் ஆர்வத்துடன் செய்கிறார்கள் என்பதுதான்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/case-for-canceling-the-lease-of-kanyakumari-bhagwati-amman-temple-lands/
அப்படிப் பார்த்த ஒரு மாணவன் தான் கோவர்தன். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சிலம்பம் கற்றுக்கொள்ள என்னிடம் சேர்ந்தார். ஆரம்பத்தில் அவர் கஷ்டப்பட்டாலும், போகப் போக இந்த கலையின் மேல் மாணவனுக்கு இயற்கையாகவே மிகுந்த ஆர்வம் இருப்பதை அறிந்தேன்.
அதன்படி தினமும் வகுப்புக்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார். சொல்லிக் கொடுக்கும் விஷயங்களை கற்பூர போல் புரிந்துகொண்டு அதனை செய்வார். முன்பை விட தற்போது சிலம்பம் சுற்றுவதிலும், வால் வீசுவதிலும் அவனது வயதிற்கு திறம் வாய்ந்துள்ளார். இதனாலேயே கோவர்தனால் தொடர்ந்து மெடல்களைப் பெற முடிகிறது.