பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்து – 13 பேர் பலி..!

2 Min Read
பற்றி எரியும் பட்டாசு தொழிற்சாலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடி விபத்து 2 பேர் படுகாயம் 13 பேர் பலி .

- Advertisement -
Ad imageAd image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்ச நாயக்கன்பட்டி என்கிற கிராமத்தில் ஆர்யா பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அப்பொழுது யாரும் எதிர்பாரத விதமாக ஆர்யா பட்டாசு தொழிற்சாலையில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் வேம்பு என்ற பட்டாசு தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . அதே போல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கம்மாபட்டியில் எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கனிஷ்கா பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு காவல்துறைக்கு தகவல் தெறிவிக்கபட்டது. தகவல் அறிந்து மீட்புப் பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .

தீயணைப்புத்துறையினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கபாளையம் ஊராட்சியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையின் முன்புறம் பட்டாசு கடையும் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு கடையிலிருந்து பட்டசுகளை வெளியே எடுத்து சேம்பில் பார்த்து வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக திடீரென வெடி வெடித்து தீப்பொறி கடைக்குள் சிதறியது .

இந்த நிலையில் கடையில் இருந்த பட்டாசுகள் முழுவதும் தீப்பற்றி வெடிக்க ஆரம்பித்தது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெறிவிக்கபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கடையிலிருந்து வெடி தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவுகிறது .

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை

இந்த வெடி விபத்தில் அழகாபுரியைச் சேர்ந்த பொன்னுத்தாய் வயது (45) , செம்பட்டையன் சமத்துவபுரம் சின்னத்தாய் வயது (35) இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர் .

சிவகாசி அருகே இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a review