பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. 4 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

1 Min Read
பட்டாசு ஆலை

சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் புஷ்வானம் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

வெடி விபத்தில் இருளாயி, ஐய்யம்மாள், சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாரனேரி காவல் நிலைய போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a review