சென்னையில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவன் கலந்து கொண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் விமலா தம்பதியினரின் மகன் லெட்சுமி ராஜா.தஞ்சையில் உள்ள ருத்ரன் சிலம்பாட்ட பயிற்சி மையத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் லெட்சுமி ராஜா தஞ்சை தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த மாதம் சென்னையில் நடந்த முதலமைச்சர் கோப்பை 2024 சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டான்.65 முதல் 75 வரையிலான எடை பிரிவில் தொடுமுனை சிலம்பம் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கம் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளான்.
மேலும் தங்கப்பதக்கம் பெற்ற மாணவன் லஷ்மி ராஜாவுக்கு ஒரு லட்ச ரூபாய்க்காண காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/as-dmk-is-bjps-a-team-we-are-bjps-b-team-what-did-they-talk-about-at-the-modi-udayanidhi-meeting-seeman-interview-in-vikravandi/
முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிலம்பத்தையும் சேர்த்ததற்கு முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட மாணவ லட்சுமி ராஜா. போட்டி முடிந்த மறுநாளே தனது வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணம் வந்து விட்டதாகவும், சிலம்பம் விளையாடுவதன் மூலம் மனமும் உடலும் வலுபடுவதாக தெரிவித்தார்.