டாஸ்மாக் என்றாலே ஒவ்வொரு நாளும் ஒரு விதமான தகவல்கள் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது சமீபத்தில் காலை 10 மணிக்கு கடையை திறக்கலாம் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் அமைச்சரின் நடவடிக்கை ஆதரவும் எதிர்ப்பும் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் 5 ரூபாய் 10 ரூபாய் பாட்டிலுக்கு விலை அதிகம் என பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருக்க வேலூரில் ஒரு வித்தியாசமான நபர் டாஸ்மாக் கடையை குத்தகைக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்த சம்பவம் அச்சமாக இருந்தாலும் கூட கொஞ்ச நேரம் அந்த பகுதியில் டைம் பாஸ் ஆக இருந்துள்ளது.
அப்படி என்னதான் செய்தார் அந்த நபர் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும் செல்போனில் வீடியோ எடுப்பது மாதிரி காலம் கடந்துள்ளது ஒரு வழியாக போலீசார் வந்த பிறகுதான் அந்த சம்பவம் முடிவுக்கு வந்திருக்கிறது. போதை தலைக்கேறியவுடன் பெரும்பாலும் பலர் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கின்றனர், சிலர் இதுபோன்று தெரிந்து செய்கின்றனர். அப்படிப்பட்ட சம்பவம் தான் இந்த சினேக் பாபு சம்பவம்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடை முன்பு புல் குடிபோதையில் பாபு என்ற (ஸ்நேக் பாபு) பாம்பு பிடிக்கும் நபர், தான் வைத்திருந்த சாக்கு பையில் இருந்து சாரை பாம்புவை வெளியே எடுத்து முத்தமிட்டு ரகளை செய்துகொண்டு, சரக்கு வாங்க வரும் நபர்களிடம் பாம்புவை காட்டி பயமுறுத்தி 10 ரூபாய், 20 ரூபாய் வசூல் செய்து அந்த பணத்தை வைத்து சரக்கை வாங்கி குடித்துக்கொண்டு ரகளை செய்து வந்துள்ளார். பணம் கொடுக்காத சென்ற நபர்கள் மீது பாம்புவை விட்டுவிடுவேன் என்று பயமுறுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த போலீசார் ஸ்னேக் பாபு வை வீட்டிற்கு போகும்படி சொல்லியும் மிரட்டியும் பார்த்தார். ஆனால் எதற்கும் அசராத ஸ்நேக் பாபு அங்கிருந்து போக மறுத்தார். பாபுவை விரட்ட வந்த போலீஸ் வந்த வழியே செல்ல என்னை ஒன்றும் பண்ண முடியாது நானே சென்றால் தான் உண்டு என்று கூறி, பாம்பை பையில் போட்டுக் கொண்டு அவராக 30 நிமிடம் கழித்து அங்கிருந்து சென்றார்.
ஸ்நேக் பாபு சென்றதும் பெருமூச்சு விட்டனர் அங்கு அமர்ந்து குடித்துகொண்டு இருந்த குடிமகன்கள்.