திருக்குறள் கூறினால் இலவசமாக சர்பத் வழங்கும் கடைக்காரர்.!

1 Min Read
  • திருக்குறள் கூறினால் இலவசமாக சர்பத் வழங்கும் கடைக்காரர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்காக புதிய சலுகை.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை உள்ள பாத்திமா நகர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் சிவாஜி ஜூஸ் கடை நடத்தி வந்தாலும் அருகில் இரண்டு மூன்று பள்ளிகள் உள்ளதால் மாணவர்களை கவரும் வகையிலும் மாணவர்களை தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் திருக்குறள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் திருக்குறள் கூறினால் ஜூஸ் வழங்கப்படும் என அறிவித்தார் ஐந்து திருக்குறள் மனப்பாடமாக ஒப்பிட்டால் அவர்களுக்கு சர்பத் இலவசமாக வழங்கியும் வருகிறார். தற்காலத்தில் மாணவர்கள் பள்ளியை முடித்துவிட்டு நேரடியாக வீட்டுக்குச் சென்று செல்போன் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் தினமும் ஐந்து திருக்குறள் பத்து திருக்குறள் மனப்பாடம் செய்து வந்து கூறினால் இலவசமாக ஜூஸ் கிடைக்கும் சர்பத் கிடைக்கும் என்பதால் மாணவர்கள் நாள்தோறும் புதிய புதிய திருக்குறள்களை படித்து கடையில் திருக்குறள் ஒப்பித்து ஜூஸ் குடித்து வருகின்றனர் ஐந்து திருக்குறள் ஒப்பித்தால் சர்பத் 10 திருக்குறள் ஒப்பித்தால் பால் சர்பத் என இலவசமாக வழங்கி வரும் சகோதரர்கள் இது தங்களுக்கு ஒரு மன திருப்தியை தருவதாகவும் இதனால் மாணவர்கள் நாள்தோறும் புதிய புதிய திருக்குறள்களை மனப்பாடம் செய்து தங்களிடம் ஒப்பிட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இது பல்வேறு மாணவர்கள் இடையே பரவி நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது இருந்தபோதிலும் அனைவருக்கும் இந்த ஜூஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

 

Share This Article
Leave a review