ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு

0 Min Read
மலைப்பாம்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்வராயன்மலை அடிவாரப்பகுதியில் நாககுப்பம் கிராமம் உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் நாககுப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.

இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த பாம்பை வனத்துறையினர் அருகில் உள்ள காப்புக்காட்டுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்து மீண்டும் காப்புக்காட்டுக்குள் வனத்துறையினர் விட்டனர்.

Share This Article
Leave a review