தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 25 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!

2 Min Read
சாமி. நடராஜன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து  தஞ்சை உள்ளிட்ட  டெல்டா மாவட்டங்களில்  வரும் 25 ம் தேதி கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன்  தஞ்சையில் பேட்டி:

- Advertisement -
Ad imageAd image

நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி  திறக்கப்பட்டது. பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது 103 அடியாக நீர்மட்டம் இருந்தது.தற்போது ஒரு மாதம் கடந்த பின்பு 75 அடிக்கு கீழ் அணையின் நீர்மட்டம் சரிந்து உள்ளது. தற்போது உள்ள நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களுக்குத்தான் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை ஏற்படும் சூழல் உள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடை மடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர்  செல்லாத நிலையில் உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் சுமார் 115 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு 35 நாட்களில் நீர்வரத்து வெறும் 200 கனஅடிக்குள் தான் உள்ளது கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக  துவங்கியிருந்தாலும் காவேரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.9  டிஎம்சி தண்ணீர் தான் வந்துள்ளது. ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரும் வழங்காமல் உள்ளனர்.

காவேரி டெல்டாவில் கு றுவைப் பயிரைக் காப்பாற்ற காவிரியில் மாதவாரியாக கர்நாடகம் கொடுக்க வேண்டிய தண்ணீர் கொடுத்தால் தான் காவிரி டெல்டாவின் சாகுபடியை பாதுகாக்க முடியும். குறிப்பாக ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் கொடுக்க வேண்டிய 122.57 டிஎம்சி தண்ணீர் மிக முக்கியமானது எனவே டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி பாதுகாக்க உடனடியாக  கர்நாடகா அணையிலிருந்து தண்ணீர் திறக்க கர்நாடகம் முன் வர வேண்டும்.

காவிரி நதிநீர் ஆணையமும் ஒன்றிய அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் வரும் 25 ம் தேதி அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வட்ட தலை நகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

Share This Article
Leave a review