தனியார் உணவகத்தில் உணவு அருந்த சென்ற கர்ப்பிணிப் பெண்; கெட்டுப்போன உணவை அருந்தியதால் வாந்தி மற்றும் மயக்கம்.

1 Min Read
  • தனியார் உணவகத்தில் உணவு அருந்த சென்ற கர்ப்பிணிப் பெண்; கெட்டுப்போன உணவை அருந்தியதால் வாந்தி மற்றும் மயக்கம் என பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு.

இது குறித்து பாதிக்கப்ப.ட்டவர்கள் கூறுகையில்
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே கர்ப்பிணி பெண் அவரது கணவருடன் ஒரு தனியார் உணவகத்தில் மத்திய உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார் அங்கு கர்ப்பிணி பெண்ணான ரம்ஜான் மற்றும் அவரது உறவு முறை பெண் ஜெயப்பிரியா ஆகியோர் பிரியாணியை சாப்பிட்டு உள்ளனர் சாப்பிட்டு சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி மற்றும் மயக்கம் ஆகியுள்ளனர் இதன் அடிப்படையில் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் சிவப்பிரகாஷ் ஹோட்டல் உரிமையாளரிடம் உணவு கெட்டுப் போய்விட்டது இந்த உணவில் துர்நாற்றம் வீசுகிறது என கடை உரிமையாளரிடம் கேட்டபோது உணவு கெட்டுப் போகவில்லை என கடை உரிமையாளர் வாக்குவாதம் செய்துள்ளார் இதனால் இருவருக்கும் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது மேலும் கடை உரிமையாளர் நீங்கள் யாரிடம் வேணாலும் புகார் தெரிவியுங்கள் இதற்காக நான் பயப்பட போவதில்லை என சொல்லி அனுப்பி உள்ளார் இதனால் மனம் உடைந்த சிவப்பிரகாஷ் ஆற்றுப்பாலம் அருகே உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அந்த உணவைக் கொண்டு வந்து மேசையில் வைத்து அதிகாரிகளிடம் வாதிட்டார் பின்பு அதிகாரியும் இந்த உணவை முகர்ந்து பார்த்து இந்த உணவு கெட்டுப் போகியுள்ளது இருந்தபோதிலும் கடை உரிமையாளர்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்து நேரில் சென்று பார்வையிட்டு கடையில் சோதனைக்காக பிரியாணியை எடுத்து சென்றனர் பின்பு மேற்கு காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் ஒன்றை அழைத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review