போதை காளான் (Magic Mushroom) என்ற போதை தரும் காளான் விற்பனை கொடைக்கானலில் அதிக அளவில் பெருகிவருகிறது Psilocybin என்கின்ற ஒரு வேதிக் கலவைகள் நிறைந்த இந்த காளான்கள் கொடைக்கானலில் அதிக அளவில் விளைகிறது.போதை காளான் பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பாக இளைஞர்கள், ஆம்லெட்டில் இந்த காளான்களை வைத்து உண்கிறார்கள். இதை உட்கொள்பவர்களை 15 மணிநேரம் வரை போதையில் தள்ளுகிறது.

மேலும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள், விளையும் இந்த காளான்கள் மற்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இடைத்தரகர்கள் பல விடுதிகள் மற்றும் தங்கும் அனுமதியில்லாத பல இல்லங்களில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு சிலர் இதை உட்கொண்டு இறந்தும் போயிருப்பது கொடுமை. மிக மோசமான இந்த செயல்பாடுகளில், பல இடைத்தரகர்கள் இருப்பதோடு அரசியல் பின்பலமும் உள்ளதாக தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காலால் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் நகர் பகுதி மற்றும் வட்டக்கனல், பூம்பாறை,மன்னவனூர்.பூண்டி, கிளாவரை ‘கூக்கல் உள்ளிட்ட மேல்மலை பகுதிகளிலும் தொடர்ந்து விற்பனை செய்வதாக புகார்கள் அதிக அளவில் வருகின்றனர் கொடைக்கானல் காவல்துறையும் அவ்வப்போது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் நகர் சின்ன பள்ளம் சம்யுக்தா காட்டேஜ் அருகே போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக கொடைக்கானல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் அப்பகுதியில் ஈடுபட்டனர் அப்போது கொடைக்கானல் கல்லுக்குழியை சேர்ந்த ஜெகன் என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்தபொழுது அவரைப் பிடித்து விசாரணை செய்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அவரிடம் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது இதை எடுத்து ஜெகனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கடந்த 2002 ம் ஆண்டு போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்த கொடைக்கா னலை சேர்ந்த சந்தோஷ் (வயது32), ராஜபாண்டி (26), பெங்களூருவை சேர்ந்த அகஸ்டின் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போதைப் பொருள் விற்பனை தொடர்பாக வழக்குகள் இருந்தது. இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செங்கமல செல்வன் கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்