தமிழகம் முழுவதும் பல ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளிக்கு வழங்க வேண்டிய பணப்பலனை பல மாதங்களாக வழங்காமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகின்றது.இதனால் அந்த குடும்பங்கள் பல சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழக அரசு வழங்க வேண்டிய பணப்பலனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க கோரி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் தலைமை போக்குவரத்து கழகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு கால பண பலன்களை வழங்கு நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காசோலை வழங்கப்பட்டது போன்று விழுப்புரம் கோட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய பண பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காத்திருப்பு போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டு வந்தனர்.