அன்னூர் பேருந்து நிலையத்தில் திடீரென மாணவியின் கழுத்தை நெரித்த மனநலம் பாதித்த இளைஞரால் நடந்த சம்பவம் பெரும் பரப்பரப்பு. போலிசார் விசாராணை.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழக – கர்நாடக மாநில எல்லை பகுதியாகவும் அன்னூர் இருந்து வருகிறது. இதனால் அன்னூர் பேருந்து நிலையத்தை நாள்தோறும் பணி நிமித்தமாகவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்காகவும்,ஊர்களுக்கு செல்வதற்காகவும் ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் நின்று, பயணம் செய்வதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் நின்று கொண்டிருந்த நிலையில், மாணவிகள் இருவர் வீட்டிற்கு செல்வதற்காக அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, அங்கு சுற்றி திருந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவிகளில் ஒருவரின் கழுத்தை பிடித்து நெருக்கமாக நெரித்துள்ளார்.

இதனை அடுத்து அன்னூர் மாவட்டத்தில் பேருந்துக்காக காத்திருந்து இதைகண்ட பொதுமக்கள் அந்த மனநலம் பாதித்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர்,பொதுமக்கள் இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து மனநலம் பாதித்த இளைஞரை மீட்டு, அப்பகுதியில் அருகில் உள்ள அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் போலிசார் விசாராணை நடத்தினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மாணவியின் கழுத்தை நெரித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நெரிக்க முயன்ற சம்பவத்தால் பேருந்து நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.