ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும் எல்லோருக்கும் இருக்கும் ஆசையை எல்லோராலும் நிறைவேற்றி விட முடியாது. அதுவும் தனக்காக தன்னை சார்ந்து இருப்பவர்களின் ஆசையை நிறைவேற்றுவதில் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்கும். அந்த வகையில் தன் மனைவியின் ஆசியை நிறைவேற்றும் விதமாக கடலூரை சேர்ந்த மரைன் இன்ஜினியர் ஒரு நிகழ்வை நிகழ்த்தி காட்டியிருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கடலூரை சேர்ந்தவர் சுபாஷ் கடந்த 15 ஆண்டுகளாக மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். சரக்கு கப்பலில் வேலை செய்வதால் வருடத்தில் பாதி நாட்கள் கப்பலிலே வேலை செய்வார். அவரது மனைவி சுபாஸ்ரீ என்னையும் கப்பலுக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக் கூற தான் செய்வது சரக்கு கப்பல் என்பதால் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதை அடுத்து நாம் கட்டப் போகும் வீட்டையாவது கப்பல் போல் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டார். சுபாஷ் வண்ணார பாளையத்தில் உள்ள தனது சொந்த இடத்தில் கப்பல் போல வீடு ஒன்றைக் கட்டி மனைவியின் ஆசையை நிறைவேற்றினார். கணவர் சுபாஷ் மறைன் இன்ஜினியர்.