சேலம் மத்திய சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதி. சிறைக்காவலருடன் இருந்த கைதிகளை காப்பாற்றிய மூன்று கைதிகளுக்கு பாராட்டு. சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இவரை சிறை காவலர் மற்றும் தண்டனை கைதிகள் 3 பேர் காப்பாற்றினர். இதனையடுத்து இவர்களுக்கு சிறைகாவலர் மூன்று கைதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டி அருகே மத்திய சிறைச்சாலை உள்ளது, இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களைப் போல தண்டனை கைதி பழனிசாமி என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மன உளச்சலில் இருந்த பழனிசாமி, நேற்று சிறை கம்பிகளில் பழனிசாமியின் சட்டை துணியை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து உள்ளார்.

அப்போது அந்த வழியே சிறை காவலர் நவீன் ராஜ் என்பவர் ரோந்து வந்தார். தண்டனை கைதி பழனிசாமி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை அறிந்த சிறை காவலர் நவீன்ராஜ் ,உடனே தற்கொலை தடுப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள கைதிகள் கோகுல்நாதன் மற்றும் பாலமுருகன் ,செந்தமிழ் செல்வன் ஆகியோர் அழைத்துக்கொண்டு பழனிசாமி அறைக்கு சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் பழனிசாமியை காப்பாற்றினார்.
பின்னர் பழனிச்சாமிக்கு சிறைத்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறி தற்கொலை முயற்சி ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறி ஆறுதல் தெரிவித்தனர் .பின்னர் தண்டனை கைதி பழனிசாமிக்கு மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமாகி நலமுடன் உள்ளார் .
இந்த நிலையில் தண்டனை கைதி பழனிசாமியை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய தண்டனை கைதிகள் கோகுல் நாதன் மற்றும் பாலமுருகன், செந்தில் செல்வன் ஆகியோரை சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு ( பொறுப்பு) வினோத் மற்றும் மன இயல் நிபுணர் வைஷ்ணவி, சமூகவியல் நிபுணர் காயத்ரி,மனநல ஆலோசகர்கள் செல்வகுமார் ,மார்ட்டின் ஆகியோர் பாராட்டினர்.
இது குறித்து சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் கூறும்போது, தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி ,சிறையில் தற்கொலை ஏதும் நடக்கக் கூடாது. முழுவதும் கண்காணிக்க வேண்டும்.மன உளச்சலில் உள்ள கைதிகளுக்கு அறிவுரை ஆலோசனை கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தவிர வாழ்க்கைப் பாலம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தற்கொலை தடுப்பு சிறப்பு திட்டம் அமைத்து மனநலம் பாதித்துள்ள மற்றும் மன உளச்சலில் உள்ள கைதிகளுக்கு உரிய ஆறுதல் ஆலோசனை சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டார். இதனையடுத்து சேலம் மத்திய சிறையில் தற்போது 50 கைதிகளுக்கு மன அழுத்தம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை ஆறுதல் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சிறைகாவலருடன் சேர்ந்து தண்டனை கைதி பழனிசாமியை காப்பாற்றிய கோகுல் நாதன், பாலமுருகன் ,செந்தில் செல்வன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு ,)வினோத் தெரிவித்தார்.