கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒடிசா ரயில் விபத்தை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கறிஞர் மீது சாதி சமய விரோதத்தோடு வன்முறையை தூண்டுதல் பொது அமைதிக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (52) வயதான இவர் தக்கலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு காரணமாக இஸ்லாமியர் ஒருவர் என குறிப்பிட்டிருந்ததார்
இந்த நிலையில் செந்தில்குமார் உள் நோக்கத்துடனும் சாதி சமய விரோதத்துடன் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தக்கலை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்
இதனையடுத்து வழக்கறிஞர் செந்தில்குமார் மீது சாதி சமய விரோதத்தோடு வன்மூறையை தூண்டுதல் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4-பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.